நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருகன்பிட்டி கிராமத்தில் ஏழு ஏக்கர் புலவு கானியில் அடாத்தாக மேற்கொள்ளப்பட்ட விவசாயம்- அழிக்கச் சென்ற அதிகாரிகள் வாயை பொத்திக் கொண்டு சென்ற அவல நிலை.
மன்னார் மாவட்டத்தில் 2025 ஆம் 2026 ஆம் ஆண்டிற்கான கால போக விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ் வருட கால போக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அடாத்தாக விவசாயம் செய்யப்படுகின்ற காணிகள் அனைத்தும் அளிக்கப்படும் என விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதன்கிழமை (19) கட்டுக்கரை குளத்தின் குளத்தின் நீர் ஏந்து பிரதேசத்தில் அடாத்தாக விவசாயம் செய்யப்பட்ட பகுதிகள் அனைத்தும் அளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருகன்பிட்டி கிராமத்தில் ஏழு ஏக்கர் புலவு கானியில் அடாத்தாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற அழிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் புதன்கிழமை (19) குறித்த இடத்திற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் கமல நல உதவி பணிப்பாளர், போலீசார்,நீர்ப்பாசன பொறியியல் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அழிப்பு நடவடிக்கைக்கு சென்றனர்.
இதன் போது குறித்த பகுதியில் அடாத்தாக விவசாயம் முன்னெடுத்து வருகின்றவர்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வேறு இடங்களில் அடாத்தாக முன்னெடுக்கப்படுகின்ற விவசாய செய்கை யை அழிக்காது இங்கு வந்ததற்கு காரணம் என்ன? என விவசாய செய்கையை முன்னெடுத்தவர்கள் வருகைதந்தவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு,தமது எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
முருங்கன் பிட்டி விளையாட்டு கழகத்தின் தேவைக்காக குறித்த விவசாயம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பலர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சட்ட விரோதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப் படுகின்ற குறித்த விவசாய செய்கையை அழிக்க வந்த அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து வெளியேறினர்.
மன்னார் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தனி நபர்களினால் பல ஏக்கர் காணிகளில் அடாத்தாக விவசாய செய்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இக்கானியானது முருங்கட்டி விளையாட்டு கழகத்தின் தேவைக்காக விவசாயம் செய்யப்பட்டு வருவதாகவும் பல வருடங்களாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இதன் பேகாது கருத்து தெரிவித்தனர்.
விவசாய செய்கையினால் பலன் அடைவது விளையாட்டுக் கழகம் என்றும் விவசாய நடவடிக்கையின் மூலம் விவசாயத்திற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை எனவும் ஒரு சில தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைக்காக விவசாய நடவடிக்கை யை அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிக விடையங்களை பெற்றுக்கொள்ள நானாட்டான் பிரதேச செயலாளரை தொடர்பு கொண்ட போது உரிய பதில் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 19, 2025
Rating:


.jpeg)




No comments:
Post a Comment