'ஆபத்தான போதை பொருட்கள் குறித்து' மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி”
'
தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் (National Dangerous Drugs Control Board), மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம் (ATI Mannar) இணைந்து உயர் தொழில்நுட்பவியல் கற்கை மாணவர்களுக்கான “ஆபத்தான போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை மன்னார் உயர் தொழில்நுட்பவியல் நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத்தின் 54 ஆம் காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் A.M.C. அபேகோன் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக வடமாகாண புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் W.P.T. பெரேரா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் மூல வளப் பேச்சாளராக தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வெளிச்சேவை அதிகாரி திருமதி A. சியாமினி வைலெட் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள், அவற்றின் சமூக விளைவுகள் மற்றும் அதிலிருந்து விலகி வாழ்வதன் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கமளித்தார்.
மேலும், மாணவர்கள் ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் என வழிகாட்டினார்.
இந்நிகழ்வில் லெப்டினன்ட் கர்னல் நளின் ஜயசுந்தர, மன்னார் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் R.J. மோகன் குரூஸ், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கல்வி நிலையத்தின் அனைத்து மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு பெற்று, ஒரு ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எதிர்காலத்தை உருவாக்கும் உறுதியை எடுத்துக்கொண்டனர்.
Reviewed by Vijithan
on
November 06, 2025
Rating:


.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment