சிப்பி ஆறு புனித அந்தோனியார் திருத்தல அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்.
மேற்படி நிகழ்வானது மேலதிக மாவட்ட செயலாளர் நிர்வாகம் திரு.ம. பிரதீப் அவர்கள் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி. வண. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்றது.
திருத்தத்தின் சுற்றுச்சூழல், காணி, சுகாதாரம், நிர்வாகம், நீர் வழங்கல், போக்குவரத்து, வியாபாரம், பக்தர்களின் அடிப்படை வசதிகள் என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் குரு முதல்வர், மேலதிக மாவட்ட செயலாளர் காணி, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், நீர் பாசன திணைக்கள பொறியியலாளர், சுகாதார துறை வைத்தியர், வன வள அதிகாரி, வன ஜீவராசிகள் அதிகாரி, பிரதேச சபை தவிசாளர், திணைக்களங்கள துறை சார் அலுவலர்கள், பொலிசார் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Vijithan
on
November 19, 2025
Rating:







No comments:
Post a Comment