ரணிலுடன் சங்கம் ; சஜித் பச்சைக்கொடி
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இரு தரப்பு இணைவு பற்றி ஆராய்வதற்காக இரு கட்சிகளும் ஏற்கனவே குழுக்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ரணில், சஜித் இணைவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
November 25, 2025
Rating:


No comments:
Post a Comment