பிறந்துள்ள புதிய வருடம் உங்களுக்கு அமைதி,நீதி,நம்பிக்கை,உண்மை,அன்பு நிறைந்த நல்ல ஆண்டாக அமையட்டும்-மன்னார் மறைமாவட்ட ஆயர்.
எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி ,புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு, புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்டு வாழவும்,நாங்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவும் அழைக்கப்படுகிறோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
-புத்தாண்டு பிறப்பையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
2025 ஆம் ஆண்டில் எமக்கு ஏற்பட்ட பேரழிவு நாடு முழுவதையும் அவலத்திற்கு உள்ளாக்கி உள்ளது.எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இந்த அவலத்தில் இருந்து மீள்வதற்கு ஒன்றாக பாடு படுகின்றோம்.அரசாங்கம் முயற்சியுடன் எல்லா மக்களையும் ஒரே பார்வையில் மீண்டு எழுந்து வெளிச்சம் உள்ள சமூகமாக மாற எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பாராட்டிற்குரியது.
ஏனைய சமய சமூக அமைப்புக்கள் ,தனியாருடைய முயற்சிகள்,நன்கொடையாளர்கள்,எல்லோறும் சேர்ந்து எடுக்கின்ற முயற்சிகள் மிகவும் பாராட்டிற்கூரியது.இந்த வேளையில் தான் பேரழிவு எங்களை நிச்சயமாக முடக்கி விட முடியாது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
புதிய வாழ்வை பெற்றுக் கொள்ளவே ஆண்டவர் எமக்கு இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்திருக்கின்றார்.2026 ஆம் ஆண்டு ஒரு புதிய ஆண்டாக எங்களுக்கு பிறந்திருக்கிறது.இந்த சூழ்நிலையிலே வேதனைகளின் நடுவிலும் ஆண்டவர் நம்மை கைவிட வில்லை என்பதை என்பதை இந்த ஆண்டு உறுதிப்படுத்துகின்றது என்கிற விசுவாச உண்மையோடு உங்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு ஆசியை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு எங்களுக்கு தருகின்ற ஆசீர்வாதம்,புதிய ஆண்டில் எங்களுக்கு தருகின்ற செய்தி என்ன என்றால் இந்த வருடம் முழுவதும் எழுச்சி மிக்க நாடாக,எழுச்சி மிக்க சமூகமாக நாங்கள் வாழ வேண்டும் மலர வேண்டும் என ஆசிக்கிறேன்.
எங்களை ஆண்டவர் குனமடைய அழைக்கின்றார்.நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய வாழ்வில் உள்ளும்,புறமும் குணமடைய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருக்கின்றோம்.கடவுள் பயத்துடன் எங்களுடைய வாழ்வில் நல்ல குணமாக்களை நாங்கள் பெற்றுக் கொள்ள இவ்வருடத்தில் நாங்கள் அழைப்பு பெறுகிறோம்.அதே வேளை நாங்கள் ஒற்றுமையாக வாழ அழைக்கப்படுகிறோம்.
எங்களிடத்தில் உள்ள பிரிவினைகள் எல்லாம் நீங்கி,புதிய வருடத்தில் நாங்கள் புதிய உணர்வோடு,புதிய சமூகமாக ஒற்றுமையின் சின்னமாக எல்லோரும் ஒன்றுபட்டு வாழவும்,நாங்கள் ஒவ்வொருவரும் சேவை செய்யவும் அழைக்கப்படுகிறோம்.நாங்கள் மற்றவர்களுக்காக வாழவும் அழைக்கப்படுகிறோம்.
இந்த அனைத்து நிகழ்வுகளிலும் ஏற்பட்ட பேரழிவுகளின் போதும் எமக்கு கிடைத்த செய்து இது தான்.நாங்கள் ஒருவர் ஒருவருக்கு நிறைய உதவி செய்தோம்.ஒருவர் ஒருவரை தாங்கிக் கொண்டோம்.அந்த சேவை மனப்பான்மை தொடர்ந்து எங்கள் சமூகத்தில் இருக்க வேண்டும்.
எனவே நாங்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி,ஒத்தாசையாக இருக்க வேண்டும் என இவ் புதிய வருடத்தில் ஆசித்து நிற்கின்றேன்.கடவுள் நமக்கு முன் செல்கிறார் என்கின்ற உண்மையுடன் நாங்கள் புதிய ஆண்டை எதிர் கொள்வோம்.
உங்களுக்கு அமைதி,நீதி,நம்பிக்கை உண்மை,அன்பு, நிறைந்த நல்ல ஆண்டாக புதிய ஆண்டு அமையட்டும்.உங்கள் ஒவ்வொருவருடைய குடும்பங்களும் உங்களுடைய தொழில் துறைகளும்,உங்கள் பிள்ளைகளும்,அவர்களின் கல்வி முயற்சிகளும் இறைவனால் இந்த ஆண்டு முழுவதும் ஆசீர் வதிக்கப்பட வேண்டும் என்றும் இந்த ஆண்டு முழுவதும் மாதாவிற்கு நாங்கள் அர்ப்பணிக்கின்றோம்.
கடவுளின் தாய் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவார்.மருதமடு அன்னையின் பரிந்துரை இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கக் கடவனவாக.என அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
January 01, 2026
Rating:


No comments:
Post a Comment