T20 உலகக்கிண்ணத்துடன் விலகுகிறார் சனத் ஜயசூரிய!
எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சனத் ஜயசூரிய 'அத தெரண'விற்குத் தெரிவித்தார்.
தனது ஒப்பந்தக் காலம் மேலும் உள்ளபோதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் நீடிப்பதற்கு தனக்கு எண்ணம் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுடனான தொடரின்போது இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆண்டின் இறுதியில் அவர் முழுநேரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சனத் ஜயசூரியவின் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலுமாக 60 போட்டிகளில் விளையாடியுள்ளது.
இதில் 29 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன், 29 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
Reviewed by Vijithan
on
January 04, 2026
Rating:


No comments:
Post a Comment