அண்மைய செய்திகள்

recent
-

சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்!

 வவுனியா, செக்கடிப்புலவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் ஒருவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


நேற்று (08) இரவு செக்கடிப்புலவு பகுதியில் வசித்துவந்த 56 வயதுடைய பவளரத்தினம் செல்வமலர் என்பவருக்கும், அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் திடீர் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது மதுபோதையில் இருந்த சகோதரர், அப்பெண்ணைக் கத்தியால் குத்தியுள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண், அங்கிருந்தவர்களின் உதவியுடன் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துள்ளார். 

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான சகோதரரைப் பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண் மரணம்! Reviewed by Vijithan on April 09, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.