மன்னார் மாணவர் விடுதி உணவு நஞ்சானதில் மாணவர் பாதிப்பு
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உள்ள ஆண்கள் விடுதியில் நேற்று மதிய உணவு நஞ்சானதில், அதனை உண்ட 67 மாணவர்கள் திடீர் சுகவீனமுற்ற நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலை முடிவடைந்த நிலையில் பாடசாலை சீருடையுடன் உணவு உண்ட மணவர்கள், பின் மத வழிபாட்டில் ஈடுபட ஆயத்தமான நிலையில் சத்தியெடுக்கத் தொடங்கினர் என அறியப்படுகிறது.பின்னர் ஒவ்வொருவராக மயக்கம் அடைந்து கீழேவிள ஆரம்பித்தனர். இவர்கள் சாப்பிட்ட உணவை உடனடியாக அப்புறப்படுத்திய வேலை ஆட்கள் அதனை கொட்டியுள்ளனர். அதனைச் சாப்பிட்ட பல காகங்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவில் கிருமிநாசினி கலக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, திவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் மன்னார் இணையம் மேலும் அறிகிறது.
மாணவர் பாதிப்பு
மன்னார் மாணவர் விடுதி உணவு நஞ்சானதில் மாணவர் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 30, 2011
Rating:

No comments:
Post a Comment