மன்னாரில் பல் சமய கருத்தமர்வு
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தலைவர்களுக்கான கருத்தமர்வு இன்று சனிக்கிழமை தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள ஞானோதயம் என்ற அகதிகள் இல்லத்தில் இடம்பெறுவதாக மன்னார் மறைமாவட்ட சமுகத்தொடர்வு அருட்பணி மையத்தின் இயக்குனரும் மன்னார் தமிழ் சங்கத்தின் தலைவருமான அருட் திரு தமிழ்நேசன் அடிகளார் தெரிவித்தார்.
'நெய்வர்' என்று அழைக்கப்படுகின்ற நல் இணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சர்வ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு சமயங்களிலும் இருந்து சமயத்தலைவர்களும் சமயம் சார்ந்த சமூகத்தலைவர்களும் நெய்வர் அமைப்பின் மத குழு உறுப்பினர்களுமாக மொத்தம் 100பேர் கலந்து கொள்கின்றனர்.
மன்னாரில் பல் சமய கருத்தமர்வு
Reviewed by NEWMANNAR
on
September 24, 2011
Rating:

No comments:
Post a Comment