அண்மைய செய்திகள்

recent
-

வடபகுதியில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதுயார்? ஆதாரமில்லா அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள்-மன்னார் பொதுஅமைப்புக்களின் ஒன்றியம்

வடமாகாணத்தில் 2002 ஆம் ஆண்டு சமாதானகாலம் தொடக்கம் 2009 ஆம் ஆண்டுயுத்தம் முடிவுற்ற பின்னரும் எந்தப் பிரதேசத்திலாவது
முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தமிழ் மக்களால் தடுக்கப்பட்டமைக்கான ஆதாரபூர்வ தகவல்கள் எங்காவது இதுவரைபதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரம் இருந்தால் நிருப்பிக்கலாம்?

யுத்தகாலத்தில் கூட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கிளிநொச்சி மாவட்டம், நாச்சிக்குடா பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. பிரபல முஸ்லிம் உணவகம் கிளிநொச்சி நகரில் இயங்கியது.

2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் மீள் குடியேற்றப்பட்டு, வாக்காளர் பதிவுகளும் மாற்றப்பட்டு அரசினது சலுகைகளும், புத்தளத்தில் இருந்துவந்து பெற்றுச் செல்கின்றனர்.

சட்டப்படி பதிவுமாற்றம் பெற்று அனைவரும் குடியேறியுள்ளதாக பிரதேச செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவை இவ்வாறு இருக்க வவுனியாவிலும், மருதானையிலும், மட்டக்களப்பிலும் யாழிலும் ஆர்ப்பாட்டம் நாடாத்தி மீள்குடியேற அனுமதி விடு தடுக்காதே என்பது எவ்வளவு அபாண்டமான உலகத்தையே ஏமாற்றும் சுத்தப்பொய்.

மன்னார் ஆயர் என்ன அரசஉயர் அதிகாரியா? அல்லது அரசாங்க அமைச்சரா? அரசநிர்வாகத்தில் தலையிடுவதற்கு, யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். அவர் மதகுரு குரல் கொடுக்க மட்டுமே முடியும். எந்த அதிகாரமும் அற்ற துறவி.

புலிகளின் ஆதரவாளர்கள்தான் திட்டமிட்டு முஸ்லிம்களை விரட்ட முனைகிறார்கள் என்கிறார் அமைச்சர்.

அவ்வாறானால் இலங்கை அரசின் நீதவான் புலியா?

பயங்கரவாதம் முற்றாக அளிக்கப்பட்டதாக அரசுபிரகடனம் செய்தது. அரசாங்கத்தின் அறிவிப்புபொய்யானதா?

நாட்டின் சனாதிபதி இந்த கூற்றில் அதிககவனம் கொள்ளவேண்டுமென தயவுடன் வேண்டுகின்றோம்.

மன்னாரில் இலங்கை அரசியலமைப்பின்படி ஜனநாயக நிர்வாகம் நடைபெறுகிறதா?

அரசாங்கம் இதைகவனிக்க வேண்டும். அமைச்சரின் நாட்டாமைப் பஞ்சாயத் தீர்ப்பே செயல்படுத்தப்படுகிறது.

தனக்கு ஒத்துழைக்கவில்லை என முன்னாள் அரசாங்க அதிபர் வெளியேற்றபட்டார்.

காணி அபகரிப்புக்கு இடம் கொடுக்கவில்லை என மாந்தை உதவி அரசாங்க அதிபர் மாற்றப்பட்டார்.

சிறப்பாக செயலாற்றிய மடுவலயக் கல்விபணிப்பாளர் பதவிபறிக்கபட்டது.

தனது ஆலோசனையை மதிக்கவில்லை என கமநலசேவை உதவி ஆணையாளர் இடமாற்றப்பட்டார்.

இவர்கள் செய்தகுற்றம் என்ன?

இதைவிட கீழ்நிலை அதிகாரிகள் பலர் திட்டமிட்டு பழி வாங்கப்படுகின்றனர்.

தனக்கு விசுவாசமாக செயலாற்றுபவரையே சகல நிர்வாகங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளது.

வழங்கபட்ட நியமனங்கள் அதிகமாக தன் சார்புடையவருக்கே வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்த வேலைகள் அனைத்தும் அவர் சிபார்சிலேதான் வழங்கப்படுகிறது.

ஆரச அதிகாரிகள் அன்று புலிகளுக்கு பயந்ததைவிட மோசமான பயத்தில் வேலை செய்கின்றார்கள்.

பொலிஸ் நிர்வாகம் பூரணமாக அவரது கட்டுப்பாட்டில் இயங்குகின்றது.

அவரது ஆதரவாளர்களை எப்போதும் தண்டிப்பதில்லை.

வள அபகரிப்பு தாராளமாக நடை பெறுகின்றது.

பலதுறைகளில் ஊழல் மோசடிகள் நடக்கின்றன.

மாந்தைமேற்கு சன்னாறிலே ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியாருடைய அனுமதியில் துப்பரவாக்கப்படுகின்றது?

இத்தனை முறையற்ற விதத்தில் அரச நிர்வாகத்தை ஜனநாயக விரோதமாகப் பயன்படுத்திவரும் அமைச்சர் முஸ்லிம்களை மீள்குடியேறத் தடுப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்வது, தும்பியைக் கொண்டு யானையை விரட்ட முனையும் கதையாகும்.

இவற்றுக்கு எதிராக நியாயம் கேட்கும் ஆயர் துரோகியாகவும் புலி முத்திரையும் குத்தப்படுகின்றது.

இவரது சட்ட விரோத செயற்பாடுகளை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள். அதுவும் மன்னாரில் நீதியான நிர்வாக நடைமுறையீனத்திற்கு பிரதான காரணமாகும்.

எனவே குற்றவாளிகளை தண்டிக்காமல் விட்டதன் விளைவே இலங்கையின் நீதித்துறைமீது இத்தனை அவமானம் நேரிட்டது.

தீர்ப்பில் உடன்பாடு இல்லையெனில் மேன்முறையீடு செய்யலாம்.

அதைவிடுத்து இலங்கையில் சட்டவாக்க ஆட்சி நடைபெறுகிறதா? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 18ம் திகதி இலங்கையின் நீதித் துறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது!

எரிபொருள் மானியம் கோரி ஆர்ப்பாட்டத்திற்கே அனுமதிவழங்க மறுக்கும் காவல்துறை சட்டத்தை நடுவீதியில் அம்பலப்படுத்த அனுமதிக்கலாமா?

மன்னாரில் தமிழ் முஸ்லிம் மக்கள் நல்லுறவுடனேயே வாழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களின் சுயநல வாக்குவங்கிக்காய் வங்குரோத்து அரசியல் பேசி மன்னாரைஅவமானப் படுத்துகின்றார்கள்.

எனவே மன்னாரில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை எவரும் தடுக்கவில்லை. தடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. அர்தமில்லாமல் இனவாதம் பேசுவது மனித நாகரிகங்களுக்கு அப்பால் உள்ளவையாகும்.

இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டமக்களையும், சர்வதேச சமூகத்தையும் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் குறிப்பாக மன்னாரிலுள்ள தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கு விரோதிகளாக வெளியில் காட்ட முனைவது வேதனைக்கு உரிய வெட்கக்கேடான செயலாகும்.

பத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அரசில் அமைச்சர்களாக இருக்கும்போது இதைச் சொல்வது நியாயமா? என்பதை நிருபிக்கவேண்டும்!

அமைச்சரின் பயங்கரவாதச் செயற்பாடுகள் மன்னாரில் நிறுத்தப்படுமானால் மக்கள் சகோதரத்துவமாக வாழ்வார்கள்.

இவ்வாறான செயல்களால் இலங்கை அரசிற்கே சர்வதேசரீதியாக அவப்பெயர் ஏற்படுத்தப்படுகின்றது!

இவற்றை மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், இங்குள்ள அரசபுலனாய்வுத் துறையினரூடாக பாதுகாப்பு செயலாளரும் அறிந்து கொள்ளவேண்டுமென தினமும் பாதிக்கப்படும் மன்னார் மக்கள் சார்பாகநீதிக்காகவும் நியாயத்திற்காகவும் நல்லாட்சிக்காகவும் ஜனநாயக மரபுகளுக்காகவும் இலங்கைஅரசின் நல்லாட்சிநிகழ்ந்து இன ஐக்கியத்துடன் மொழிகடந்து, சகோதரத்துவமாக வாழ வேண்டுமென எதிர்பார்த்து வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பொதுஅமைப்புக்களின் ஒன்றியம்,

மன்னார் மாவட்டம்.
வடபகுதியில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதுயார்? ஆதாரமில்லா அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்கள்-மன்னார் பொதுஅமைப்புக்களின் ஒன்றியம் Reviewed by Admin on July 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.