அபிவிருத்திப்பணியில் சில கிராமங்கள் அரசினால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றது!- வினோ. எம்.பி
எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொழிற்பயிற்சிகளை கற்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கிய தேவையாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.
மன்னார் சிறுத்தோப்பு உதயபுரம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தையல் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மன்னார் உதயபுரம் கிராமம் தற்பொழுதுதான் படிப்படியாக முன்னேறி வருகின்றது. இக்கிராமத்திற்கு தேவைகள் பல உள்ள போதும் குறித்த தேவைகள் அடையாளம் காணப்பட்டு ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் இக்கிராமத்தைப் பொறுத்தவரையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. குறித்த கிராமத்தில் பல்வேறு குறைபாடுகளும் காணப்படுகின்றன.
ஆனால் அரசாங்கமாக இருந்தாலும் சரி அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி இப்போதுள்ள சூழ்நிலையில் சில கிராமங்கள் திட்டமிட்டும், திட்டமிடப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
குறித்த கிராமங்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமல் மந்த கதியிலேயே உள்ளன.
இந்த நிலையில் தான் இந்த உதயபுரம் கிராமத்திற்கான தேவைகள் பல உள்ளன.
தற்போது இக்கிராமத்தில் இருக்கின்ற வழங்களை பயன்படுத்தி எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு நாம் கைகொடுக்க வேண்டும்.
குறிப்பாக தையற்பயிற்சி போன்ற பயிற்சி நெறிகள் கற்பதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போது அவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது கிடைத்த தையற்பயிற்சி கூட உங்களின் எதிர்காலத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்தக் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னால் இயன்ற உதவிகளை வழங்க முடியும் எனவும், பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து தையல் இயந்திரங்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அபிவிருத்திப்பணியில் சில கிராமங்கள் அரசினால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகின்றது!- வினோ. எம்.பி
Reviewed by NEWMANNAR
on
July 31, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment