மன்னார் அணி கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் யாழ்.மண்ணில் வெற்றி- படங்கள் இணைப்பு
மன்னார் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணிக்கும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி வை.எம்.எஜ்.ஏ அணிக்கும் இடையில் இரண்டு T20 கடினப்பந்து கிரிக்கெட் போட்டிகள் கடந்த சனிக்கிழமை கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
சனிக்கிழமை காலை நடைபெற்ற முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி வை.எம்.எஜ்.ஏ அணியினர் 20 ஓவர்களில் 08விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்டார் ஈகிள் அணியினர் 16.4 ஓவர்களில் 04விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி வை.எம்.எஜ்.ஏ அணியினர் 20 ஓவர்களில் 09 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்டார் ஈகிள் அணியினர் 16.4 ஓவர்களில் 06விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர்.
இப்போட்டியில் 2-0 எனும் விகிதத்தில் ஸ்டார் ஈகிள் அணி தொடரை கைப்பற்றியது. இப் போட்டியின் ஆட்டநாயகனாக றோய்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்திலிருக்கும் கழகம் ஒன்று யாழ்.மாவட்டத்தில் விளையாடும் முதலாவது கடினபந்து கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் அணி கடினப்பந்து கிரிக்கெட் போட்டியில் யாழ்.மண்ணில் வெற்றி- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
July 30, 2012
Rating:

No comments:
Post a Comment