சிலாபத்துறையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கிளினிக் நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற கோரிக்கை.
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கிராமத்தில் அமைந்துள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான கிளினிக் நிலையத்தில் பொலிஸார் நிலை கொண்டுள்ளமையினால் அங்கு கடந்த பல மாதங்களாக எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் கிளினிக் நிலையத்தில் நிலை கொண்டுள்ள பொலிஸாரை உடன் வெளியேற்றி குறித்த கிளினிக் நிலையத்தை மீண்டும் மக்களிடம் கையளிக்குமாறு கோரி முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் ஏ.சுனேஸ் சூசை நேற்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளார்
குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சிலாபத்துறை கிராமத்தில் அமைந்துள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான கிளினிக் நிலையத்தில் பொலிஸார் பல மாதங்களாக நிலை கொண்டுள்ளனர்.
இதனால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கிளினிக் நடத்துவதற்கான தனி இடம் இல்லாத நிலை காணப்படுகின்றது.
கர்ப்பிணித்தாய்மார்கள் சிலாபத்துறை வைத்தியசாலையிலே நீண்டநாட்களாக கிளினிக்கிற்கு சென்று வருகின்றனர்.
இதற்காக நியமிக்கப்பட்ட வைத்தியர் இனி வரும் காலங்களில் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை வழங்க முடியாது என அறிவித்து விட்டார்.
சிலாபத்துறையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கிளினிக் நிலையத்திலிருந்து பொலிஸாரை வெளியேற்ற கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
August 01, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment