அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் திருப்பி அனுப்பப் பட்டது சர்வ மத தலைவர்களுக்கும் அவமானம் -ஜெயலத்

 மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய  இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்க்க அனுமதி வழங்காமை இலங்கையில் அனைத்து சர்வ மத தலைவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட அவமானம் என ஐ .தே .கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்

இது குறித்து அவர் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கொடிப்புலிக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது.


நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஜூலை 27 ம்  திகதி மன்னார் ஆயர் அதி வணக்கத்துக்குரிய  இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுடன் வவுனியா சிறையிலிருந்த கைதிகளை மகர சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்  சந்திக்க சென்றிருந்தோம்.இக் கைதிகளை சந்தித்து அவர்களுக்காக  செய்யவும்
ஆசிர்வதிக்கவும் வேண்டும் என ஆயர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

குறித்த கைதிகளில் கத்தோலிக்கர்களும் இருந்தனர்.இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்ற போது அது குறித்து உங்களுக்கு அறியப்படுத்தினேன்,உங்களது தனிப்பட்ட உதவியாளரான சுமுது பெரேரா நீங்கள் அதிக வேலைப்பளு எனவும் தற்சமயம் உங்களால் உரையாட முடியாது எனவும் என்னிடம் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு கைதிகளை பார்க்க அனுமதி கிடைத்தது.மன்னார் ஆயருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மகர சிறை அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து உங்களிடம் நான் வினவிய போது ஆயர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தால் அனுமதி வழங்கி இருக்கலாம் என தெரிவித்திருந்தீர்கள்.ஆயருக்கு இது குறித்து ஆலோசனை வழங்க வில்லை
என நான் கூறினேன்.மகர சிறைச்சாலை அதிகாரிகள் தங்களுக்கு சிறைச்சாலைகள் தலைமையகத்திலிருந்து இந்தப் பணிப்புரை விடுக்கப் பட்டதாக தெரிவித்தனர்.

சிறைச்சாலைகளின் சாதாரண கலாசாரமான,மற்றும் சம்பிரதாயமானது ஒரு கைதியை நாள் ஒன்றுக்கு மூவருக்கு மேல் பார்க்க முடியாது  படியே ஆயரும் நானும் சென்றிருந்தோம்.இக் கைதிகள் ஆயரை சந்தித்து ஆசிர்வாதம் பெற ஆவலாக இருந்தனர்,எனினும் ஆயரை கைதிகளை பார்க்க விடாது தடுத்தது இக் கைதிகளை ஏனைய கைதிகளிலும் இருந்து வேறு பிரித்து பார்ப்பது போன்றது.

மன்னார் ஆயருக்கு கைதிகளை பார்க்க சிறைச்சாலைகள் ஆணையகம் அனுமதி வழங்காது விடுக்கப் பட்ட பணிப்புரையின் காரணம் மற்றும் அது குறித்து தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் மற்றும் உங்களது  நிலைப்பாடு அடங்கிய பதிலை எதிர் பார்க்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் திருப்பி அனுப்பப் பட்டது சர்வ மத தலைவர்களுக்கும் அவமானம் -ஜெயலத் Reviewed by NEWMANNAR on August 02, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.