மன்னாரில் வரட்சி-குளங்கள் வற்றும் நிலை-மீன்கள் இறப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பல குளங்கள் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இதனால் குளங்களின் நீர் மட்டம் மிகவும் சொற்ப அளவிலேயே காணப்படுகின்றது.
-மன்னாரில் உள்ள குளங்கள் வற்றியுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு இம்முறை சிறுபோக நெற்பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் பல மாதங்களாக மழை பெய்யாதுள்ள நிலையில்,குறித்த வரட்சி நிலமை தொடாந்தால் விவசாயிகளும் மக்களும் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.தற்போது குளங்கள் வற்றுவதினால் குறித்த குளங்களில் உள்ள மீன்கள் தற்போது இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திவ்யா
மன்னாரில் வரட்சி-குளங்கள் வற்றும் நிலை-மீன்கள் இறப்பு
Reviewed by NEWMANNAR
on
August 02, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment