மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு செப்டெம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
கடந்த வருடம் மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட 53 பேருக்குமான வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் இடம் பெற்றது.
இதன் போது 52 பேர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னால் மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் அவர்களுக்கு தொலைபேசியூமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர் றிஸாட் பதீயுதின் மன்றில் ஆஜராகியிருந்தார்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த வழக்கு விசாரணையையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி க்கு ஒத்திவைத்தார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல், நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு செப்டெம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.
Reviewed by Admin
on
June 10, 2013
Rating:

No comments:
Post a Comment