பழமரங்களில் இருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை
யாழ்.மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று தற்போது மீளக் குடியேற்றப்பட்ட மக்களது காணிகளில் உள்ள பழமரங்கள் மற்றும் பயன்தராத பழமரங்கள் என்பனவற்றை இனங்கண்டு அவற்றில் இருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி திணைக்களங்களினால் பயிற்சி வழங்கப்பட்ட 45 பேர் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது யாழ் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் செயற்பாடு நடைபெற்று வருகின்றது.
அதன்படி பழமரங்களில் உள்ள தேவையற்ற கிளைகளை வெட்டி அகற்றுவதுடன் அதற்குத் தேவையான பசளைகளை இட்டு பாராமரிக்கின்றனர்.
ஒருவரது காணியில் உள்ள விளைச்சல் தராத 2 மரங்கள் திணைக்களத்தினால் இலவசமாக வெட்டித்துப்புரவு செய்து கொடுக்கப்படுவதுடன் மூன்றாவது மரத்தில் இருந்து தலா ஒவ்வொரு மரத்திற்கும் 1500 ரூபாவினை மர உரிமையாளர்களிடமிருந்து அறவிடப்படும்.
இவ்வாறான விளைச்சல் அதிகரிப்பு முறையினை செய்ய விரும்புபவர்கள் விவசாய திணைக்களத்தில் உள்ள போதனாசிரியர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பழமரங்களில் இருந்து உச்ச பயனைப் பெறுவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை
Reviewed by Admin
on
June 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment