அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!� இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே கடந்த புதன்கிழமை மூழ்கிய படகில் இருந்த அகதிகளில் 13 பேரின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


அதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய கண்காணிப்பு விமானம் ஒன்று பெரும்பாலும் ஆண்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுமாக சுமார் 55 பேர் வரை குறித்த படகின் மேல் தளத்தில் இருப்பதை அவதானித்துள்ளது.

பின்னர், இன்னொரு படகில் இருந்து விடுக்கப்பட்ட உதவி அழைப்பு தகவலையடுத்து, தேடுதல் நடத்தியும் மூழ்கிய படகை கண்டுபிடிக்க முடியவில்லை.

வெள்ளி இரவு கண்டுபிடிக்கப்பட்ட படகு மூழ்கிய இடத்திற்கு அருகே நேற்று சனிக்கிழமை பகல் 9 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 4 பேரின் சடலங்கள் நேற்று மாலை கண்டுபிக்கப்பட்டுள்ளன.

காணாமற்போன ஏனைய அகதிகளைத் தேடும்பணி தொடர்கிறது.

எனினும் கண்டுபிடிக்கப்பட்டு கடலில் மிதக்கும் 13 சடலங்களும் இன்னமும் மீட்கப்படவில்லை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் வெளியிட்ட செய்தி

கிறிஸ்மஸ் தீவுகளின் அருகில் படகு மூழ்கியதில் 9 அகதிகள் உயிரிழப்பு
கிறிஸ்மஸ்தீவில் அகதிகள் படகு கடலில் மூழ்கியது!� இதுவரை 13 சடலங்கள் கண்டுபிடிப்பு! Reviewed by Admin on June 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.