ஆசியாவிலேயே அதிகளவு இராணுவம் நிலைகொண்டுள்ள பிரதேசமாக வடக்கு; கபே அமைப்பு கூறுகிறது
அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு மிகவும் அதிகளவிலான இராணுவத்தினர் உள்ளனர். சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசியாவில் அதிகளவான இராணுவம் நிலை கொண்டுள்ள பிரதேசமாக இலங்கையின் வடக்குப் பிரதேசத்தைக் கருத முடியும். வடக்கில் இராணுவம் சிவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுகிறது.அது பொருள்களை விற்பனை செய்வது முதல் பாதுகாப்பு உட்பட பல விடயங்களில் நீண்டு செல்கிறது.
வடக்கில் முகாம்களில் உள்ள இராணுவத்தினரை இந்தப் பணிகளில் இருந்து விலக்கி வைக்காமல் தேர்தலை நடத்துவது எந்த வகையிலும் நேர்மையானதல்ல. எனினும் செயற்பாடுகளை வரையறுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ளது போல், பொலிஸாருக்குச் சிவில் பணிகள் வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் தற்போதுள்ள பிரச்சினைக்குத் தற்காலிகமாவோ, குறுகிய காலத்திற்கோ தீர்வு காணமுடியும்.வடக்கில் தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை தெளிவாக உள்ளது. காரணம் போருக்குப் பின்னர் வடக்கில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டத்தை நாம் பார்த்தோம்.ஆனால் தெற்கில் ஏனைய பிரதேசங்களில் இருக்கும் அரசியல் சுதந்திரம் வடக்கில் உள்ளது என்று கூறமுடியாது. எனினும் கடந்த காலங்களில் பிரதேசத்தில் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
அகதி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான முன்னேற்றமான பல விடயங்கள் நடந்துள்ளன. இதனால் தேர்தல் நடத்தக் கூடிய தெளிவான சூழல் அங்கு காணப்படுகிறது. முன்னார் காணப்பட்ட கண்ணிவெடி அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என அனைத்தும் நீங்கியுள்ளன. தாம் ஏற்றுக்கொண்டதை நாம் நம்புவதைப் பிறருக்கு கூறும் சுதந்திரம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
ஆசியாவிலேயே அதிகளவு இராணுவம் நிலைகொண்டுள்ள பிரதேசமாக வடக்கு; கபே அமைப்பு கூறுகிறது
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment