வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
கம்பஹா வெலிவேரிய பகுதியில் நேற்று முன்தினம் இராணுவத்தினரும், பொலிஸாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சிங்கள இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், இரு ஊடகவியலாளர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மிலேச்சத்தன தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
வீதியில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் மக்களை மனிதத் தன்மையுடன் அணுகி பிரச்சினைக்குத் தீர்வுகாண பொலிஸார் முயலவேண்டும்.
ஆனால், இலங்கையில் தற்போது கடமையில் இருக்கும் பொலிஸார் அரசுக்கு சார்பான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது அமைதியாக இருக்கின்றனர்.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பொலிஸாரும், இராணுவத்தினரும் வந்து தமது அடாவடியைக் காட்டிவிட்டுச் செல்கின்றனர்.
வடக்கில் தமிழ் மக்கள் மீது தொடரும் இவ்வாறான நடவடிக்கை தற்போது தெற்கில் சிங்கள மக்கள் மீதும் தொடர்கின்றது.
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி நடைபெறுகின்றது என்பதற்கு கம்பஹா வெலிவேரியவில் நேற்று முன்தினம் நடைபெற்ற சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தமது அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்திய சிங்கள மக்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தி ஒருவரைப் பலியெடுத்ததை தமிழ்க் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. என்றார்.
வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவத்தின் கொடூர ஆட்சி!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment