அண்மைய செய்திகள்

recent
-

சன்னார் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்கள் 4 வருடங்களாகியும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவிப்பு

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சன்னார் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன் சன்னார் கிராமத்தில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.அப்போது சன்னார் கிராமத்தில் 150 தமிழ் குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க எந்த அரச நிறுவனங்களும் முன்வரவில்லை.இந்த நிலையில் தனியார் நிறுவனங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

குறித்த சன்னார் கிராமத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன் சுமார் 150 தமிழ் குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீள் குடியேறிய போது அமைக்கப்பட்ட தற்காலிக குடிசையிலே இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த கிராமத்தில் இது வரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை,உரிய முறையில் வீதிகள் செப்பனிடப்படவில்லை,மின்சாரம் இல்லை. போன்ற அத்தியாவசிய தேவைகள் எவையும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

ஆனால் சன்னார் கிராமத்தில் கடந்த கடந்த 8 மாதங்களுக்கு முன் அரசினால் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட 27 முஸ்லிம் குடும்பங்களுக்கும் தேவையான சகல  அடிப்படை வசதிகளும் அரசினால் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த 27 குடும்பங்களுக்கும் தனித்தனியே 1 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டம்,வீதி புனரமைப்பு,பள்ளிவாசல் நிர்மானிப்பு,குடி நீர் திட்டம்,பொது தேவைகளுக்கு அரச காணி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 வருடங்களுக்கு முன் மீள் குடியேறிய தமிழ் மக்களுக்கு எவ்வித வசதிகளையும் இந்த அரசும்,மாந்தை மேற்கு உதவி அரச அதிபர் பனிமனை அதிகரிகளும் வழங்காத நிலையில் பக்கச்சார்புடன் கடந்த 8 மாதங்களுக்கு முன் குடியேறிய மக்களுக்கு சகல வித உதவிகளையும் வழங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும்,சன்னாரில் கடந்த 4 வருடங்களுக்கு முன் மீள் குடியேறிய தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளதோடு இப்பிரதேசத்திற்கு உரிய அரச அதிகாரிகள் சுயநலத்துடனும்,அரசியல் செல்வாக்குகளுடனும் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


சன்னார் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்கள் 4 வருடங்களாகியும் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தவிப்பு Reviewed by Admin on August 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.