ஆட்பதிவு திணைக்களத்தில் பல்வேறு முறைகேடுகள்! ஒரே இலக்கமுடைய 500 அடையாள அட்டைகள்
சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகள் ஒரே இலக்கங்களைக் கொண்டிருப்பதாக்கக் குறிப்பிடப்படுகிறது. குறித்த தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்துவோர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடையாள அட்டை தயாரிப்பின் போது கணனி பயன்படுத்தப்படாத காரணத்தினால் இவ்வாறான மனிதத் தவறுகள் இடம்பெறுவதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரே இலக்கத்தைக் கொண்ட தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவோர் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்பதிவு திணைக்களத்தில் பல்வேறு முறைகேடுகள்! ஒரே இலக்கமுடைய 500 அடையாள அட்டைகள்
Reviewed by Admin
on
August 03, 2013
Rating:

No comments:
Post a Comment