அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக நடக்கிறதா என்பதை அவதானித்தே தமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்று சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான பொதுபலசேனா தெரிவித்துள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஆயிரம் பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று எச்சரித்திருந்த பொதுபலனோ 13ஆவது திருத்தச்சட்டத்தில் காணி காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டும் என்றும் கூறி இனவாத ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

 இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் மௌம் காத்து வந்த பொதுபலசேனா தற்பொழுது இந்தியா அல்லது சர்வதேசத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக கூட்டமைப்பு செயற்படுகிறதா என்று அவதானிப்பதாக தெரிவித்தது.

 இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசேகர தேரர் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றும் என்று தாம் முன்பே அறிந்தது என்றும் குறிப்பிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை முதன்மைப்படுத்தியே தனது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றும் இனவாதத்தை வைத்தே கூட்டமைப்பு வெற்றி பெற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளை வைத்தே தமது இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா! Reviewed by Admin on September 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.