அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்; எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தகவல்

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலகத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கின்றது. 

 இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகல நோயாளர்களையும் எச்.ஐ.வி. பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காது போனால் எயிட்ஸ் நோய் தொற்று நோய் போல் பரவ ஆரம்பித்து விடும். இருப்பினும் இலங்கையில் ஆபத்தான பாலுறவுகளில் ஈடுபடும் நபர்கள் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. 

இதுவே இந்த நோய் வேகமாக பரவ காரணமாகியுள்ளது. அதன்படி 2011 ஆம் ஆண்டு 146 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 2012 ஆம் ஆண்டு 186 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் எயிட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளான 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 1739 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் இலங்கையில் மொத்தமாக 4500 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 4500 எயிட்ஸ் நோயாளிகள்; எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் தகவல் Reviewed by Admin on September 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.