அண்மைய செய்திகள்

recent
-

சில வைத்திய அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் யாழில் சுகாதார சேவை பாதிப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் வருடாந்த இடமாற்றம்  பெற்றுள்ள சுமார் 44 வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா விடுவிக்க மறுத்து வருவதால் யாழ் மாவட்டத்தில் உள்ள மூடப்பட்டுள்ள 16 வைத்தியசாலைகளை இயங்க வைக்க முடியாமல் உள்ளது 
 

மேலும் மிகுந்த ஆளணி  பற்றாககுறையுடன் இயங்கிவரும் சிறு வைத்தியசாலைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையின் தென் பகுதியில் உள்ள கராபிட்டி போதனா வைத்தியசாலை சுமார் 119 வைத்தியர்களை (1ஃ3 பங்கு ) விடுவித்து இயங்கி வருவதை இங்கு சிறந்த உதாரணமாய் இங்கு குறிப்பிடலாம்.

மேலும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுடன் தொடர்பற்ற யாழ்  பல்கலைகழக வைத்தியர் சு.ரவிராஜ் ஆகியோரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும்  அரசியல் நோக்கங்களுக்காக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலை மீறியும் செயற்பட்டு வருகின்றனர் .


இதனால் யாழ்  மாவட்டத்தில் சுகாதார சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது .

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாயின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள சுமார் 58 வைத்தியர்களுக்கு நாட்டின் வேறு பகுதிகளுக்கு நியமனம் வழங்குவதை  தடுக்க முடியாது.


இதனால் ஏற்படும் சுகாதார சேவை பாதிப்புகளுக்கு  யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா யாழ்  பல்கலைகழக வைத்தியர் சு.ரவிராஜ் போன்றவர்களே பொறுப்புகூற வேண்டும் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றது 





வைத்தியர் சமன் அபயவர்தன 
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சில வைத்திய அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் யாழில் சுகாதார சேவை பாதிப்பு Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.