மன்னார் மக்கள் தமிழ் தேசியத்திற்கு கொடுத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். சட்டத்தரணி அ.சூ.பி. சிராய்வா.
வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு
12927 அதிகூடிய வாக்குகளை பெற்று 1ஆம் இடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட சட்டத்தரணி அ.சூ. பிறிமுஸ் சிராய்வா தனது வெற்றிக்குப்பின் கருத்து தெரிவிக்கையில்..,
தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் 3 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியிருக்கின்றது என்று சொன்னால் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் தமிழ் தேசியத்திற்கு கொடுத்திருக்கின்ற ஆணையாகத்தான் இந்த வெற்றி அமைந்திருக்கின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியை அமைத்து நிச்சயமாக மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற உரிமைகள் தொடர்பாக வட மாகாணத்தில் இருக்கின்ற பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய பலத்த குரலை ஒலிக்கச்செய்யும் என்பதிலே எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
அத்துடன் தனது கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னோடு தோள் நின்று உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
மன்னார் மக்கள் தமிழ் தேசியத்திற்கு கொடுத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன். சட்டத்தரணி அ.சூ.பி. சிராய்வா.
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:


No comments:
Post a Comment