தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு வவுனியாவில் வட்டமேசை கலந்துரையாடல்
தேசிய நல்லிணக்கத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளது.
இது தொடர்பில் வவுனியாவில் நேற்றும் இன்றும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.
வட்டமேசை கலந்துரையாடலாக நடத்தப்படும் இந்த நிகழ்வின்போது வடக்கு கிழக்கை சேர்ந்த சமய பெரியார்கள், பங்கேற்கின்றனர்.
இந்தநிகழ்வில், வட அயர்லாந்தின் மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர் டேவிட் ரஸல், வட அயர்லாந்தின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்கான பணிப்பாளர் மைக்கல் டொக்கேடி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குறித்த நல்லிணக்க முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கமும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பொதுநலவாய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் பதில் தலைவர் கெரன் மெக்கன்ஸி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான வட்டமேசை கலந்துரையாடல் ஒன்றை பொதுநலவாய அமைப்பு கடந்த மே மாதத்தில் லண்டனில் நடத்தியது.
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பொதுநலவாய அமைப்பு வவுனியாவில் வட்டமேசை கலந்துரையாடல்
Reviewed by Admin
on
September 27, 2013
Rating:

No comments:
Post a Comment