அண்மைய செய்திகள்

recent
-

தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்கள் சேவை ஆற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேல் சேவையில் உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது .

 இது குறித்து கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாவது : - 

 ஒரு தேசிய பாடசாலையில் தொடர்ச்சியாக பணிபுரியும் ஆசிரியர்களின் சேவைகளை ஏனைய தேசிய பாடசாலை மாணவர்களும் பெற்றுக் கொள்வதற்கான வழியை ஏற்படுத்தும் பொருட்டு , ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது .

 இதன் நிமித்தம் தேசிய பாடசாலைகளில் 20 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர்களை அடுத்த வருடம் ஜனவரியில் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

 இதற்கான தரவுகள் தற்போது சகல தேசிய பாடசாலைகளிலுமிருந்து பெறப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார் . தமிழ் மொழி மூலம் கற்பிக்கும் 88 தேசிய பாடசாலைகள் அடங்கலாக நாடு பூராகவும் 350 தேசிய பாடசாலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது .


தேசிய பாடசாலைகளில் பத்து வருடங்கள் சேவை ஆற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.