அண்மைய செய்திகள்

recent
-

வறிய விவ­சா­யி­க­ளுக்­கான மானியப் பொருட்­களை உரிய முறையில் பார­பட்­ச­மின்றி வழங்­க­வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக் குளத்தின் கீழ் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் ஏழை விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபடமுடியாத நிலையில் பல சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் . இரணைமடுக்குளத்தின் கீழான செய்கை நில உரிமையாளர்கள் வேறு மாவட்டங்களில் தொழில் நிமித்தம் வசித்து வருகின்ற நிலையில் உரிமையாளர் இல்லாது காணப்படும் அச் செய்கை நிலங்களை சில கமநல சேவை திணைக்களங்கள் அரச அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி அக் காணிகளை செய்கையில் ஈடுபடும் தமக்கு விசுவாசமுள்ள விவசாயிகளுக்குச் செய்கை மேற்கொள்வதற்கு வழங்கியுள்ளனர் . 


 இதனால் இங்கு செய்கைக்காக வழங்கப்படும் மானிய உரம் , தொழில் உபகரணங்கள் , விவசாய உள்ளீடுகள் என்பவற்றையும் இவ் விவசாயிகள் ஒரு குடும்பத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களின் பெயர்களையும் வெவ்வேறாகப் பதிவு செய்து பெற்றுக் கொள்கின்றனர் . குறைந்தளவான நிலங்களில் செய்கையில் ஈடுபடுவோர் தமக்கான மானிய உரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளைப் பெறமுடியாதுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் .

 எடுத்துக்காட்டாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் நிலத்திற்கான மானிய உரம் , விவசாய உள்ளீடுகள் போன்ற உதவிகள் வழங்கப்படும்போது அதிகளவான ஏக்கரில் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இவற்றைப் பெறுவதற்காக குடும்பத்திலுள்ள அனைத்து அங்கத்தவர்களின் பெயர்களையும் தனித்தனியாகப் பதிவு செய்து அவற்றைப்பெற்றுச் செல்கின்றனர் . இதனால் குறைந்தளவான நிலங்களில் செய்கையில் ஈடுபடும் ஏழை விவசாயிகள் பணத்தைத் திரட்டி பங்கீட்டு அட்டைக்கான இம் மானியப் பொருட்களைப் பெறச் செல்லும்போது அவை முடிந்துவிட்டதாகக் கூறப்படுவதாகவும் இதனால் அதிகளவான பணத்தைக் கொடுத்து வெளியிடங்களிலிருந்தே இவற்றைப் பெற்றுச் செய்கையில் ஈடுபடுகின்றனர் .

 இத்தகைய செயற்பாடுகளால் தாம் செய்கைகளில் அதிகளவான வருவாயைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதனைக் கருத்திற் கொண்டு குறைந்தளவான செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான மானியப் பொருட்களை உரிய முறையில் கமநலசேவை நிலையங்கள் வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றனர் .
வறிய விவ­சா­யி­க­ளுக்­கான மானியப் பொருட்­களை உரிய முறையில் பார­பட்­ச­மின்றி வழங்­க­வேண்டும். Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.