சம்பந்தனின் கரத்தை அரசாங்கம் இறுக பற்றிக் கொள்ள வேண்டும்: மனோ கணேசன்
மல்லாகத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு கைக்குண்டு வீச்சில் சனசமூக நிலையம் சேதமடைந்துள்ளது.
இந்த கைக்குண்டு வீச்சு இன்றிரவு 10.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மல்லாகம் மத்தியில் உள்ள அம்பனாக்கடவை வீதியென அழைக்கப்படும் சேச் வீதியில் உள்ள சுவாமி ஞானப்பிரகாசர் சனசமூக நிலையம் மற்றும் நூலகக் கட்டிடத்தின் அருகாமையில் கைக்குண்டு வீழ்ந்து வெடித்துள்ளது.
இதனால் சனசமூக நிலையத்தின் கட்டிடச்சுவர் மற்றும் அருகில் உள்ள வீட்டின் கதவு சுவர் என்பவற்றில் குண்டுச் சிதறல்கள் பட்டுள்ளதனால் சேதமும் ஏற்பட்டுள்ளது
.
மோட்டார் சைக்கிளில் வந்தவாகள் இந்த கைக்குண்டுத் தாக்குதலை மேற்க்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளார்கள். குறிப்பிட்ட சனசமூக நிலைய முன்றலில் இரவு வேளையில் இளைஞர்கள் இருந்து கதைப்பதாகவும் அவர்களை இலக்க வைத்து இந்த குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை காவல் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராய்சி தலைமையிலான் காவல்துறை குழுவினர் உடனடியாக சம்பவம் இடம் பெற்ற இடத்திற்க்கு விரைந்து விசாரணைகளையும் மேற்க்கொண்டுள்ளனர்.
சிறீலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் அடிவருடிகள் ஒட்டுக்குழுக்கள் மீண்டும் தங்கள் கைவரிசையினை காட்ட தொடங்கியுள்ளார்கள்
சம்பந்தனின் கரத்தை அரசாங்கம் இறுக பற்றிக் கொள்ள வேண்டும்: மனோ கணேசன்
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment