வடக்கு தேர்தலின் போது இடம்பெற்ற அடக்குமுறைகள், வன்முறைகள் குறித்து விசாரணை அவசியம் : பிரித்தானியா
வடமாகாண சபை தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் வடக்கு தேர்தலை அரசாங்கம் நடத்தியமையினை தாம் வரவேற்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் நடாத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மீதான அடக்குமுறைகள், அரச சொத்து பயன்பாடு போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது. நாட்டில் உள்ள மக்களுக்கு தேர்தல்களின் மூலம் தேவையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எனவே அவர்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தலின் போது இடம்பெற்ற அடக்குமுறைகள், வன்முறைகள் குறித்து விசாரணை அவசியம் : பிரித்தானியா
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment