வடக்கு தேர்தலை ஜப்பான் வரவேற்பு
கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி முதற் தடவையாக வட மாகாண சபை தேர்தல் சமாதான முறையில் நடத்தப்பட்டதை ஜப்பான் வரவேற்றுள்ளது.
பல வருட போரின் பின்னர் தேசிய நல்லிணக்க செயல்முறையில் இது ஒரு முக்கியமான செயற்பாடாகும் எனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
தேசிய நல்லிணத்தை நோக்கிய பயணத்தில் இலங்கை சீராக முன்னேறிச் செல்லும் எனவும் ஜப்பான் நம்புகிறது.
இந்த இலட்சியத்தை அடைவதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் ஊடக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தேர்தலை ஜப்பான் வரவேற்பு
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment