இலத்திரனியல் வாக்களிப்பு முறை; விரைவில் என்கிறார் தேர்தல் ஆணையாளர்
குறைந்தளவு வாக்குகளை பெறும் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கக் கூடாது என ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
தேர்தலில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதால் அவற்றுக்கான கட்டுப்பணத் தொகையை அதிகரித்து அதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று முன்தினம் புத்தளத்தில் உள்ள பாடசாலையில் இருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டை சம்பவத்தின் மூலம் நாட்டில் இலத்திரனியல் முறையிலான வாக்குப் பதிவு முறை துரிதமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
அத்துடன் சில மாவட்டங்களில் கூடுதலான அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடும் போது வாக்கு எண்ணுவதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் நீண்ட வாக்குப் பட்டியலை பிரித்து தனித்தனியாக எண்ண வேண்டும். இதனால் ஒரு வாக்கு கூட பெறாத கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்க இடமளிக்க முடியாதவாறு சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறான மாற்றுவழிகள் மூலம் தேர்தல் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை இம்முறை நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்படாத சுயேட்சைக்குழுக்களின் 30 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலத்திரனியல் வாக்களிப்பு முறை; விரைவில் என்கிறார் தேர்தல் ஆணையாளர்
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:

No comments:
Post a Comment