வடபகுதி மக்களுக்கு முதற் தடவையாக ஜனநாயக ரீதியான உரிமை கிடைத்துள்ளது. கிளி.மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்.
மூன்று தசாப்தங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மக்களுக்கு முதற்தடவையாக
ஜனநாயக முறையில் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் சந்த ர்ப்பம் கிடைத்துள்ளதையிட்டு அவர்கள் மிக மகிழ்ச்சியடைந்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியாகப் பணியாற்றிய மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளி நொச்சி மாவட்டத்தில் எவ்வித அழுத்தங்களுமின்றி மக்கள் சுதந்திரமாகவும் ஒற்றுமை யாகவும் வாக்களிப்பதற்கான சூழல் காணப்பட்டது .72 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
தேர்தல் சேவைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட ஆயிரத்து 749 பேர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றினர் .
பதிவுசெய்யப்பட்ட 68 ஆயிரத்து 800 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 95 மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன . கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன . தேர்தலை நீதியும் நேர்மையாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பொலிஸாருக்கும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றிகள் எனத் தெரிவித்தார் .
வடபகுதி மக்களுக்கு முதற் தடவையாக ஜனநாயக ரீதியான உரிமை கிடைத்துள்ளது. கிளி.மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்.
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:

No comments:
Post a Comment