சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெலம் மெக்ரே இலங்கை வரவுள்ளார்!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கெலம் மெக்ரே ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டிருந்தார்.
இதனால் இலங்கையிலும் உலகம் முழுவதும் பாரிய சர்ச்சை கிளம்பியது.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்த சனல் 4 ஆவணப்படங்களே உந்துதலாக இருந்தன என்றும் கூறலாம்.
‘‘யுத்த சூனிய வலயம்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள்‘‘, ‘‘இலங்கை கொலைக்களங்கள்- தண்டிக்கப்படாத குற்றங்கள்‘‘ என இலங்கை யுத்தம் தொடர்பான ஆவணப்படங்களை தயாரித்தவர் கெலம் மெக்ரே ஆவார்.
இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது. அதன்மூலம் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்சவிற்கு கிடைக்கும்.
மனித உரிமை மீறல், சட்ட ஒழுங்கு பிரச்சினை போன்றவற்றில் இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் கெலம் மெக்ரே இலங்கை வரவுள்ளார்!
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment