அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றவும்.-செல்வம் எம்.பி

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள சிறுத்தோப்பு ஆலயம் ஒன்றிற்குச் சொந்தமான 17 ஏக்கர் காணியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி குறித்த காணியினை சிறுத்தோப்பு ஆலய நிர்வாகத்திடம் கையளிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதுகாப்பு அமைச்சின் செயலாளர் கேத்தபாய ராஜபக்ஸ அவர்களிடம் கடிதம் மூலம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள சிறுத்தோப்பு ஆலயத்திற்குச் செந்தமான 17 ஏக்கர் காணியில் கடற்படையினர் முகாமிட்டு அங்கு உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் குறித்த காணியில் முகாமிட்டு உள்ளனர்.குறித்த காணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும்,300 இற்கும் மேற்பட்ட பனைமரங்களும் உள்ளடங்கலாக குறித்த ஆலயத்திற்கு வருமானம் தருவதாகவும்,கோயில் பராமரிப்பு,ஏழை,விதவைகள்,உற்பட பலரும் கடந்த காலங்களில் பலன்களை பெற்று வந்தனர்.

 ஆனால் தற்போது குறித்த காணியில் பல நூற்றுக்கணக்கான தென்னை,பனை மரங்கள் கடற்படையினரினால் வெட்டப்பட்டுள்ளது. இதனால்அதனை நம்பியிருந்த மக்களும்,ஆலய நிர்வாகமும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது குறித்த காணியினை குறித்த காணியில் உள்ள இலங்கை கடற்படையின் கஜபா படையணிக்கான முகாம் அமைப்பது தொடர்பாக காணி சுவீகரிப்பு சட்டத்தின் (அத்-460) 2 ஆம் பிரிவின் கீழ் அறிவித்தல் வழங்கப்பட்டது.

 இது தொடர்பான அறிவித்தல் பிரசுரம் காணி சுவீகரிப்பு உத்தியோகத்தரினால் குறித்த பகுதியில் ஒட்டப்பட்டது.இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பாரிய கவலையினை ஏற்படுத்தியுள்ளது. எனவே குறித்த காணி சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமானதாக காணப்படுகின்ற நிலையில் அதற்காண சகல விதமான ஆவணங்களும் அவர்களிடம் உள்ளது.

 எனவே குறித்த காணியில் உள்ள கடற்படையினரை அகற்றி குறித்த காணியினை ஆலய நிர்வாக சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் சிறுத்தோப்பு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றவும்.-செல்வம் எம்.பி Reviewed by Admin on September 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.