மாற்றுவலுவுடையோர் சம்மேளனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்
கிளிநொச்சியில் மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் மாவட்ட சம்மேளன அங்குரார்ப்பண நிகழ்வு
கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் செல்லமுத்து சிறிநிவாசன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் , அரச துறை அதிகாரிகள் , சமூக சேவைகள் அமைச்சின் சி.பி. ஆர் திட்ட தொண்டர்கள் , மாற்றுவலுவுள்ளோர் அங்கம் வகிக்கும் கிராமிய மட்ட அமைப்புக்கள் , மாற்றுவலுவுள்ளோர்கள் , கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
மாற்றுவலுவுள்ளோர் தொடர்பாக அரச , அரச சார்பற்ற நிறுவனங்களை இணைத்து வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது .
மாற்றுவலுவுள்ளோர் தமது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார்கள் .
கருத்துக்களின் முடிவில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சம்மேளனம் அமைக்கப்பட்டது .
இவ் அமைப்பின் தலைவராக தி . சிவமாறன் , செயலாளராக திருமதி . பா . விஜயலட்சுமி , பொருளாளராக திருமதி . செ . தவச்சித்திரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் .
மாற்றுவலுவுள்ளோர் பிரதிநிதிகளும் , அரச துறை , அரச சார்பற்ற துறைகளைச் சேர்ந்த தலா 2 பிரதிநிதிகளுமாக 11 பேரை உள்ளடக்கிய நிர்வாக சபை தெரிவும் செய்யப்பட்டுள்ளது . மேலதிக அரசாங்க அதிபர் செ . சிறிநிவாசன் இவ் அமைப்பின் போசகராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
மாற்றுவலுவுடையோர் சம்மேளனம் கிளிநொச்சியில் அங்குரார்ப்பணம்
Reviewed by NEWMANNAR
on
November 16, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 16, 2013
Rating:


No comments:
Post a Comment