சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கலாபோவஸ்வௌ, நாமல்கம, பூனாவ, மதவாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்தவர்களே வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று, எமது ஒற்றுமையை குழைக்காதே, சனல் 4 வேண்டாம் போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்;டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.
இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெதிலக உள்ளிட்டோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment