தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்ப்படாமையை கண்டித்து அடையாள பணிபுறக்கணிப்பு -படங்கள்
தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவு வழங்ப்படாமையை கண்டித்து அடையாள பணிபுறக்கணிப்பில் மன்னார் தாதிமார் இன்று ஈடுபட்டுள்ளனர்
இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த அடையாள பணிபுறக்கணிப்பு 10 மணிவரை நடைபெற்றது.இதன் போது தாதிய உத்தியோகத்தர்கள் மன்னார் பொது வைத்தியசாலையின் முன் வளாகத்தில் சுலோகங்களை ஏந்தியவாறு பணிபுறக்கணிப்பின் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தெரியவருவது இவ் வருடம் தை மாதம் தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவானவு தரங்களுக்கமைவாக அதிகரிக்கப்பட்டது
எனினும் முன்னைய மாதங்களில் கடமையாற்றியதை போன்றே மணித்தியால எண்ணிக்கையிலான அதிகரிப்ப எதுவுமின்றி மேலதிககடமைகளை ஆற்றிவருகின்றனர்.
எனினும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான அடிப்படை சம்பளத்தைப்பார்க்கிலும் மேலதிக நேரகொடுப்பனவு அதிகரித்து காணப்படவதாக தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்
எனினும் வழமைபோலவே தாதிய கடமைகளை செய்யவேண்டிய கட்டாய தேவையுள்ளதால் நோயாளர் நலன்,பராமரிப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு தாதியர் கட்டாயம் செய்யப்படவேண்டிய வேலை அல்லாத மேலதிக நேரக்கடமையை இரவு பகல் பாராது மறுப்பேதும் தெரிவிக்காது சேவையினை ஆற்றிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இவ் வருடம் தை மாதம் முதல் எதுவித முன் அறிவித்தலுமின்றி அடிப்படை சம்பள தொகைக்கு சமனான தொகை மட்டுமே மேலதிக நேரகொடுப்பனவாக வழங்கப்படுவதுடன் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமான மேலதிக நேரகொடுப்பனவு தொகை வெட்டப்பட்டே வழங்கப்படுகிறது
அதன் பின் வைகாசி மாதம் முதல் அவ்வாறேனும் வழங்கப்பட்ட கொடுப்பனவும் நிறுத்தப்பட்டு சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விபரிக்கும் வகையிலான பல கடிதங்கள் அமைச்சின் உயர்மட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதிலும் கடந்த 10 மாதங்களாக எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை
இதனை அடுத்து தாதியர்கள் தமது கடமை நேரத்தில் மாத்திரம் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்நிலையில் மேலதிக நேரக்கொடுப்பனவை வழங்கக்கோரி குறித்த அடையாள பணிபுறக்கணிப்பில் தாதியர் இன்று ஈடுபட்டுள்ளனர்
தாதிய உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்ப்படாமையை கண்டித்து அடையாள பணிபுறக்கணிப்பு -படங்கள்
Reviewed by Author
on
November 14, 2013
Rating:

No comments:
Post a Comment