வாழும் உரிமைக்காக நாட்டின் இராணுவத்துடன் போராடுகிறோம்!- சீ.வி.விக்னேஷ்வரன்
தமிழர்கள் நாங்கள் வாழும் உரிமைக்காக சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை. ஒரு நாட்டின் இராணுவத்துடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே மிகவும் அவ தானமான முறையில் போராட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சாத்வீக வழியிலான மக்கள் போராட்டங்கள் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் எமக்கான நியாயங்கள் கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியேற்றக்கோரி நடைத்தப்பட்டுவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 2ம் நாளான நேற்று காலை உண்ணாவிரதம் நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு வருகைதந்த முதலமைச்சர் அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வலி,வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுடைய அனைத்துப் பிரச்சினைகளையும் நாங்கள் அறிந்திருக்கின்றோம்.
மேலும் முன்னர் ஒருமுறை வந்திருந்தபோது மக்கள் எங்களுக்கு முழுமையாக கூறியிருக்கின்றார்கள்.
குறிப்பாக 2 வருடங்களுக்கு முன்னர் இடிக்கப்படாமல் இருந்த விடுகள் இப்போது இடிக்கப்படுவதாகவும், வீடுகளிலிருந்த கட்டிடத் தளபாடங்கள் எடுக்கப்படுவதாகவும் எமக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாதுள்ளது. உள்நாட்டில் எங்கள் பிரச்சினைகளை உள்நாட்டில் விளங்கிக் கொள்ளக்கூடியவர்கள், அல்லது கேட்ககூடியவர்கள் இல்லை.
எனவே எங்கள் பிரச்சினைகளை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடமும், ஊடகம் சார்ந்தவர்களிடமும் தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக நேற்றைய தினம் வருகைதந்திருந்த கனடிய நாட்டின் பிரதிநிதிகளிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். வருகைதரவுள்ள பிரிட்டிஷ் பிரதமரிடமும் நாங்கள் மிக தெளிவாக கூறவுள்ளோம்.
எனவே இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை எம்மால் முடிந்தவரையில் முயற்சிப்போம்.
நாங்கள் எமக்க்கு மறுக்கப்பட்டிருக்கும் வாழும் உரிமைகளுக்காக சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை. ஒரு நாட்டின் இராணுவத்துடன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
எனவே போராட்டம் மிக அவதானமாக இருக்கவேண்டும். நாங்கள் முதலாவதாக ஆளுநரை மாற்றம் செய்வதற்கான போராட்டத்தை நடத்தியிருக்கின்றோம். எனவே போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
மக்கள் ஒன்றிணைந்து இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே இவ்வாறான எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட முடியும்.
அதேபோன்று இவ்வாறான மக்கள் போராட்டங்களை தடுக்கவும், முடக்கவும் இராணுவத்தினரும், அரசாங்கமும் பல முயற்சிகளை மேற்கொள்ளும்.
ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் மக்கள் தமது போராட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு நிச்சயமாக இருக்கும் நாங்கள் மக்களுடைய உணர்வுகளை, அவர்கள் கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்த நிலையில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் கஷ்டங்களை நன்றாக தெரிந்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வாழும் உரிமைக்காக நாட்டின் இராணுவத்துடன் போராடுகிறோம்!- சீ.வி.விக்னேஷ்வரன்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment