வடக்கு கிழக்குக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்! வலிமைண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வங்காளவிரிகுடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் உருவாகியிருந்த தாழமுக்கமானது, தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக 600 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 550 கிலோ மீற்றர் தூரத்திலும் நாகபட்டினத்திலிருந்து கிழக்கு-வடகிழக்காக 570 கிலோ மீற்றர் தூரத்திலும் காணப்படுகிறது.
இது தற்போது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்தத் தாழமுக்கமானது இப்போது வலுவான தாழமுக்கமாக உருமாறி, வட தமிழ்நாட்டுக் கடலோரத்தின் நாகபட்டனம் ஊடாக எதிர்வரும் 16ம் திகதி பிற்பகலளவில் இந்தியாவை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்வது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று சற்றுப் பலமாக வீசும்.
பொத்துவில் முதல் மட்டக்களப்பு ஊடான யாழ்ப்பாணம் வரையான ஆழ்கடல் பிரதேசங்களிலும், அம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு ஊடான யாழ்ப்பாணம் வரையான ஆழமற்ற கடல் பிரதேசங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். முக்கியமாக பிற்பகல் இல்லது இரவு வேளைகளில் இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காணப்படும். மன்னார் வளைகுடா முதல் யாழ்ப்பாணம், திருகோணமலை ஊடான பொத்துவில் வரையான ஆழ்கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அங்கு காற்றின் வேகமானது இடையிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசலாம்.
வடக்கு கிழக்குக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்! வலிமைண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment