உலக நிரிழிவு தினத்தைஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் -படங்கள்
உலக நிரிழிவு தினத்தைஒட்டி மன்னார் சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிரிழிவுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று காலை மன்னார் சுகாதார பணிமனையில் ஆரம்பமாகியது.
மன்னார் சுகாதார பணிப்பாளர் என்.பறீட் தலைமையில் நடைபெற்ற குறித்த நிரிழிவு நோய்க்காக விழிப்புணர்வு ஊர்வலத்தில் டாக்டர்.சுசில்,டாக்டர்.டெனி,டாக்டர்.றோய், டாக்டர்.ராஜன்,டாக்டர் ஈற்ரன் பீரிஸ்,டாக்டர் மதன்,டாக்டர் சுதாகர்,டாக்டர்.சிவபால சுந்தரம் மற்றும் சுகாதார திணைக்கள பணியாளர்கள், தாதிமார்,சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் தாழ்வுபாடு வீதியுடாக சென்று செபஸ்ரியார் பேராயல வீதியை அடைந்து அங்கிருந்து மன்னார் பிரதான நகரத்தை சென்றடைந்தது பின் மன்னார் பிரதான வீதி ஊடாக சென்று ஆஸ்பத்திரி வீதியை அடைந்து மீண்டும் சுகாதார பணிமனையினை சென்றடைந்தது ஊர்வலம் முடிவடைந்தது.
உலக நிரிழிவு தினத்தைஒட்டி நடத்தப்பட்ட குறித்த ஊர்வலம் தொடர்பாக தெரிவித்த மன்னார் சுகாதார பணிப்பாளர் என்.பறீட் நீரழிவு நோய்க்கான காரணங்களை குறிப்பிட்ட உடல்நிலை மாற்றத்தின்மூலம் அறிந்து கொள்ள முடியும் அதன்படி அடிக்கடி சிறுநீர்கழித்தல் ,வழமைக்கு மாறாக அடிக்கடி குடிநீர் அருந்துதல்,சோர்வு போன்ற அறிகுறிகள் பலவுள்ளன எனவே அவ்வாறான உடல்நிலை மாற்றத்தினை அவதானித்தால் அது தொடர்;பாக வைத்திய ஆலொசனைகள் மற்றும் சிகிச்சைகளை பெறமுடியும்
.
ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிகிச்சை நிலையங்கள் மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்திய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது எனவே சம்பந்தபட்ட நோயாளிகள் தமது பகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
உலக நிரிழிவு தினத்தைஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் -படங்கள்
Reviewed by Author
on
November 14, 2013
Rating:

No comments:
Post a Comment