48 நாடுகளின் பிரதிநிகள் கிளிநொச்சி விஜயம்
கொழும்பிலிருந்து விமானம் மூலம் இரணைமடு விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், முதல் விஜயமாக இரணைமடுக் குளத்தினைப் பார்வையிட்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் என்.சுதாகரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போது, இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனம் தொடர்பாகவும் பிரதிநிதிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதிநிதிகள் செஞ்சோலை சிறுவர் இல்லம், சேவாலங்கா நிறுவனம், மற்றும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஆகியவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
48 நாடுகளின் பிரதிநிகள் கிளிநொச்சி விஜயம்
Reviewed by Author
on
November 13, 2013
Rating:

No comments:
Post a Comment