அண்மைய செய்திகள்

recent
-

இந்திய பிரதமர் காரணத்தை தெரிவிக்கவில்லை: பீரிஸ்

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டுக்கு வருகை தராததற்கான காரணம் எதையும் இந்திய பிரதமர் கூறவில்லையென வெளிவிவகார அமைச்சர் யி.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு செவ்வாய்க்கிழமை (12) மாலை கூறினார்.

 இதேவேளை,இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையிட்டு அங்கத்துவ நாடுகளின் விசனங்கள் பற்றி கேட்டபோது, மனித உரிமைகள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொதுநலவாயம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் வேலை செய்கின்றதென கமலேஷ் சர்மா கூறினார்.

 இதற்கும் மேலாக சித்திரவதை பற்றிய தேசிய விசாரணை அமைப்பு ஒன்றை உருவாக்க பொதுநலவாய செயலகம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் வேலை செய்கின்றதென சர்மா கூறினார். மாநாட்டில் கலந்து கொள்ளாத தலைவர்கள் பற்றி அளவுக்கதிகமான கவனம் செலுத்தாமல் ஊடகங்கள் பெரும்பான்மையாக பொதுநலவாய நாடுகளின் ஆர்வம் மிக்க பற்றலுடன் இடம்பெறும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் பற்றி முக்கிய கவனத்தை செலுத்த வேண்டுமென அமைச்சர் பீரிஸ் ஊடகங்களுக்கு கூறினார்.


இந்திய பிரதமர் காரணத்தை தெரிவிக்கவில்லை: பீரிஸ் Reviewed by Author on November 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.