இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு தீக்கிரை
இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு நேற்று சனிக்கிழமை எரியூட்டப்பட்டுள்ளது. வவுனியா சுந்தரப்புரப் பகுதியிலுள்ள குறித்த பெண்ணின் வீடே ஏரியூட்டப்பட்டுள்ளது.
அண்மையில் குறித்த குடும்பத்தை சேர்ந்த யுவதியொருவர் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் தாயும் சகோதரர்களும் வசித்து வருகின்ற வீடு எரியூட்டப்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் இடம்பெற்ற வேளை தாயார் அவரது மகன் வீட்டிற்கு சென்றிருற்ததுடன் ஏனையவர்கள் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.
இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் வீட்டில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் நாசமாகியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு தற்காலிக கொட்டகை ஒன்று வவுனியா மாவட்ட செயலகத்தினால் அமைத்துக கொடுக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் சமைத்த உணவும் வழங்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இராணுவத்தில் இணைந்த பெண்ணின் வீடு தீக்கிரை
Reviewed by Admin
on
December 29, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment