திருக்கேதீஸ்வரத்தில் மேலும் இரண்டு எலும்புகூடுகளும் சில மனித எச்சங்களும் மீட்ப்பு –படங்கள்
இதனை அடுத்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் தொகை முப்பத்தொன்பதாக அதிகரித்துள்ளதுடன் மேலும் சில மனித எச்சங்களும் மீட்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டு பிடிக்கப்பட்ட தடயப் பொருட்களில் பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலைக் குண்டுகளும் அதேபோன்று கையில் அணியும் வளையல்களின் துண்டுகள் சிலவும் கண்டு பிடிக்கப்பட்டுளளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ந் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர பிரிவிக்குட்ப்பட்ட மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி இன்று (18.01.2014) சனிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் ஒன்பதாவது தடவையாக காலை 8.30 மணி தொடக்கம் 11 மணி வரை இவ் மனித எச்சங்களை தேடி கண்டறியும் அகழ்வு வேலை நடைபெற்றது.
இதன்போது குறித்த இரண்டு மண்டை ஓடுகளும் மனித எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதன்போது குறித்த பகுதியிலிருந்து மேலும் சில எலும்புக்கூடு மனித எச்சங்கள் கணப்படுவதை அவதானித்த நிலையில் குறித்த மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பகுதி நாளை ஞாயிற்றுக்கிழமை சற்று விஸ்தரிக்கப்படவுள்ளது.
இன்நிலையில் மேலும் பல மனித எச்சங்களை கண்டு எடுக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த பகுதியிற்கு இன்று சென்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப் மற்றும் குரு முதல்வர் விக்டர்; சோசை ஆகியோர் குறித்த பகுதியினை பார்வையிட்டனர்.
மேலும் எதிர்வரும் திங்கட்கழமை மனித எச்சங்களை தேடி எடுக்கும் பணி தொடரவுள்ளது.
திருக்கேதீஸ்வரத்தில் மேலும் இரண்டு எலும்புகூடுகளும் சில மனித எச்சங்களும் மீட்ப்பு –படங்கள்
Reviewed by Author
on
January 18, 2014
Rating:
Reviewed by Author
on
January 18, 2014
Rating:




No comments:
Post a Comment