வவுனியாவில் சிலுவைப் பாதை சிலைகள் சேதம்!-செல்வம் எம்.பி கண்டனம்.
வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த சிலைகளில் சுமார் 08 சிலைகள் இனந்தெரியாதவர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,
வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த சிலைகளில் சுமார் 08 சிலைகளின் பாகங்கள் இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதோடு சிறிய சிலைகள் சிலவும் சேதமாக்கப்பட்டுள்ளது.
கல்வாரி திருத்தலத்திலுள்ள 15 தொகுதி சிலைகளில் உள்ள சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்துக்களின் ஆலயங்கள் மீது தாக்குதல்கள் மேறகொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து முஸ்ஸீம்களின் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தற்போது கத்தோலிக்க மக்களின் ஆலயங்கள் மீதும் திருச்சொரூபங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச்சம்பவங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டிக்கின்றது. சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதும் தொடர்ச்சியாக இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நாட்டில் மதச்சுதந்திரம் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசு சிறுபான்மையின மக்களையும்,அவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாப்பது தொடர்பில் அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றது.
வட,கிழக்கில் தமிழ்-முஸ்லீம் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்த சில சக்திகள் செயற்பட்டு வருகின்றது.அற்கு நாம் இடமளிக்கக்கூடாது.
எனவே இத்தாக்குதல் சம்பவத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்ககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் சிலுவைப் பாதை சிலைகள் சேதம்!-செல்வம் எம்.பி கண்டனம்.
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:






No comments:
Post a Comment