அண்மைய செய்திகள்

recent
-

பரிசுத்த பாப்பரசரின் மடு திருத்தல வருகைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!- 5 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு (Photo)

பரிசுத்த பாப்பரசரின் மடுத் திருத்தல வருகையின் போது சுமார் ஐந்து இலட்சம் மக்கள் கலந்து கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து வருவதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.

பரிசுத்த பாப்பரசரின் மடுத் திருத்தல வருகை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாப்பரசரின் மடு வருகைக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி மடுவுக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் அன்றைய தினம் மாலை 3.15 மணிக்கு விசேட ஹெலிகெப்டர் மூலம் மடுத் திருத்தலத்தை வந்தடைவார்.

அவ்விடத்திலிருந்து பாப்பரசரை ஆலய மண்டப முன்றலுக்கு திறந்த வாகனம் மூலம் மன்னார் மறை மாவட்ட ஆயரும், கர்தினாலும் அழைத்து வருவர்கள்.

இதன்போது அங்கு கூடியிருக்கும் மக்களை பாப்பரசர் ஆசீர்வதிப்பார். அத்துடன் பாப்பரசர் மக்களைச் சந்தித்து கலந்துரையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அவர் ஒரு மணித்தியாலம் மட்டுமே மடுவில் தங்கியிருப்பார். இறை வழிபாடும் பாப்பரசரின் விசேட ஆசீர்வாதமும் இடம் பெற்ற பின் மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர் வாதத்தையும் பாப்பரசர் மக்களுக்கு வழங்குவார்.
பாப்பரசரின் வருகையை முன்னிட்டு சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தற்பொழுது இப்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஒரு சில ஆயத்த வேலைகள் காலதாமதம் அடைந்து வருகின்றன.

பாப்பரசரின் வருகையின்போது யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார், அனுராதபுரம் ஆகிய ஐந்து மறை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் மடுத் திருத்தலத்திற்கு வருவதை இல குபடுத்துவதற்காக நான்கு பாதைகளை பயன்படுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, வவுனியாவிலிருந்து பிராமனாலன் வீதி வழியாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி வீதியூடாகவும், மன்னார் – மடு வீதியூடாகவும், பெரியமடு வீதி வழியாகவும் மடுத்திருத்தலத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரிசுத்த பாப்பரசரின் வருகை நிகழ்வில் கலந்து கொள்ள வரும் மக்களை அன்றைய தினம் காலை பத்து மணி தொடக்கம் பிற்பகல் இரண்டு மணி வரையுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர்கள்.

அதன் பின் சோதனை நிறுத்தப்படுவதுடன் குறிப்பிடப்படும் சில இடங்களுக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள.

நிகழ்வுக்கு ஆலயத்தின் முன் பகுதிக்குள் வருபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு விசேட அடையாள சின்னம் அணிவிக்கப்படும்.

அதன் பின் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இவர்கள் அமர்ந்து கொள்வார்கள். விசேடமாக அழைக்கப்பட்டவர்களுக்கு விசேட இடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குருக்கள், அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் விசேட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தனியார், அரச போக்குவரத்து சேவைகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டள்ளது. எனினும் பாப்பரசரின் மடு வருகை தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று இடம்பெறும் அதன் பின் நடைமுறைகள் குறித்து இறுதி அறிக்கை வெளியிடப்படும். மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியான்ஸ் பிள்ளை மேலும்தெரிவித்தார்.
பரிசுத்த பாப்பரசரின் மடு திருத்தல வருகைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி!- 5 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு (Photo) Reviewed by NEWMANNAR on December 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.