பிரிட்டன் குடிவரவு அதிகாரியுடன் வேண்டத்தகா அனுபவம்: சங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காரா, கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு லண்டனுக்கு சென்றிருந்த போது குடிவரவு அதிகாரியுடன் அவருக்கு வேண்டத்தகா அனுபவம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் கணக்கில் ட்விட் செய்துள்ள சங்கக்ககாரா, தான் 15 வருடங்களாக பிரிட்டனுக்கு பயணிப்பதாகவும் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றது இதுவே முதற்தடவை எனவும் கூறியுள்ளார். இதேவேளை, அக்குடிவரவு அதிகாரியுடன் ஏற்பட்ட அனுபவத்தை முரட்டுத்தனமானதும் மிகவும் அநாகரிகமானதும் என்றும் அவர் விழித்துள்ளார்.
பிரிட்டன் குடிவரவு அதிகாரியுடன் வேண்டத்தகா அனுபவம்: சங்கா
Reviewed by Author
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment