அண்மைய செய்திகள்

recent
-

பெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்


வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கேயுள்ள பெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் காடழிப்பு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வன இலாகா திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆரம்பகாலம் முதல் வசித்துவருபவர்களுக்கு மாத்திரமே குறித்த காட்டுப் பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அருண ஹதுருசிங்க கூறியுள்ளார்.

பெரியமடு பகுதியில் இடம்பெற்றவந்த சட்டவிரோத நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின்போது குற்றவாளிகளாக காணப்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் வன இலாகா திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பெரியமடு காட்டில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கட்டட நிர்மாணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on July 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.